வவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு

வவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா – மடுக்கந்த குளத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டபோதே இக் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மடுக்கந்த குளத்தில் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகளின் போதே வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மடுக்கந்த பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அபிவிருத்திப்பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதோடு, சம்பவ இடத்திற்குச் விரைந்த பொலிஸார், விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைக்குண்டை செயலிழப்பதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]