‘வவுனியா’வில் விபத்து; இருவர் பலி

‘வவுனியா’வில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் ஐந்து பேர் பயணித்த கார் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.