வவுனியாவில் வாள்வெட்டு – மயிரிழையில் உயிர்தப்பிய 2மாத கைக்குழந்தை

வவுனியாவில் வீடொன்றில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (02) இரவு 9 மணியளவில் வாள்வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

மேலும் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வீட்டிற்கு விரய வாகனத்தில் வந்த 15க்கு மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு நின்ற 32 வயதுடைய இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு கொழுத்தி வீட்டின் யன்னல் கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் கதவை உடைத்து சுமார் 7லட்சம் பெறுமதியான பணத்தினை கொள்ளையடித்துச் தப்பித்துச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இதன் போது வீட்டினுள் ஜன்னல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த 2 மாத கைக்குழந்தை தாயார் கட்டிப்பிடித்து காப்பாற்றியதனால் நூலிழையில் குழந்தைக்கு எதுவித பாதிப்புமின்றி தப்பித்துள்ளது.

இந்த தாக்கதுல் சம்பவத்தில் காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்படுகிறது.

வவுனியாவில் வாள்வெட்டு

இதேவேளை நேற்று தவசிகுளம் மற்றும் கூமாங்குளம் பகுதியில் இளைஞர் குழுக்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் சுந்திரமூர்த்தி என்ற 36 வயதுடைய நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

வவுனியாவில் வாள்வெட்டு

இதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]