வவுனியாவில் வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

வவுனியா சந்தையில் தனது விவசாய உற்பத்தி பொருட்களை கொடுத்துவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்றபோதே யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனமொன்று பின்புறமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற ஓமந்தை சின்னக்குளத்தை சேர்ந்த 50 வதுடை ராசன் என்பவரே ஸ்தலத்தில் பலியாகியதுடன் அவரது சடலம் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந் நிலையில் வாகனத்தின் சாரதியை கைது செய்ய வவுனியா பொலிஸார் வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]