வவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது

வவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது

வவுனியா, ஓமந்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்களிடமிருந்து 1670 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் இருந்து திருகோணமலைக்கு சென்ற பேருந்தொன்றை ஓமந்தை பகுதியில் வைத்து பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது சட்டவிரோத போதை மாத்திரைகளை உடமையில் வைத்திருத்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

வவுனியாவில் பெருந்தொகை வவுனியாவில் பெருந்தொகை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]