முகப்பு News Local News வவுனியாவில் புதுக்குடியிருப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்து- 20பேர் காயம்

வவுனியாவில் புதுக்குடியிருப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்து- 20பேர் காயம்

கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 20இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து மதவாச்சிக்கும் வவுனியாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் அதிகாலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பயணிகள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலும் புதுக்குடியிருப்பு, சிவநகர், யாழ்ப்பாணம் மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நித்திரை கலக்கத்தில் பேருந்தை செலுத்தியமையே விபத்திற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தொியவந்துள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com