வவுனியாவில் பிரபல பாடசாலையொன்றில் மாணவி ஒருவரை தாக்கிய அதிபர்

வவுனியா நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓமந்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் பாடசாலை மாணவி மீது நேற்றைய முன்தினம் (16.01.2018) பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி ஒமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல மணிநேரம் கடந்த நிலையிலும் இதுவரையில் குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக ஒமந்தை பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தினை காணவில்லை என தெரிவித்து எனது பிள்ளையினை அதிபர் தனது அறையில் கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். ஆனால் இதுவரையில் ஒமந்தை பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை .

எனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் உள்ளது. ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் தான் எனது மகளுக்கு நீதியினை பெற்றுத்தரவேண்டுமேன தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]