வவுனியாவில் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து

தீ விபத்து

வவுனியாவில் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து

வவுனியாவிலுள்ள வைரவ புளியங்குளம் எனும் பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்று தீ விபத்தினால் முழுவதுமாக எரிந்துள்ளது.

இத்தீவிபத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை முற்றிலும் எரிந்து சாம்பலானதாக பொலிசார் தெரிவித்தனர்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்பதால் தீ வேகமாக பரவியிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

தீவிபத்தினால் தொழிற்சாலையிலிருந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களும் எரிந்துள்ளன. அவற்றின் மதிப்பு என்னும் கணக்கிடப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]