வவுனியாவில் காணாமற்போன மாணவன் மன்னாரில் கண்டுபிடிப்பு

வவுனியா – வெளிக்குளத்தை சேர்ந்த மாணவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமற்போயிருந்த நிலையில் இனறு மன்னார் தீருக்கேதீச்சரம் கோவில் உட்பட பல இடங்களுக்கும் கடந்த நான்கு நாட்களாக சென்றுள்ள நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்ற ச. சாருபன் என்ற மாணவன் மறுநாளும் வீடு வராததால் பெற்றோரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் பெற்றோர்கள் கடும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு பல இடங்களிலும் நடத்தியிருந்த நிலையில் இன்று மதியத்திற்கு பின்னர் மன்னார் பகுதியில் தேடுதல் நடத்தியபோது மன்னாரில் மாணவனை கண்டதாக பலரும் தெரிவித்ததை அடுத்து தேடுதலை தீவிரப்படுத்திய உறவினர்கள் மன்னாரில் நகர்ப்பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சுற்றித்திரிந்த நிலையில் அவரை கண்டு பிடித்துள்ளனர்.

மனரீதியியான குழப்பம் காரணமாகவே அந்த மாணவன் வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் மன்னார் சென்றுளள்தாகவும் அங்கு தீருக்கேதீச்சரம் கோவில் உட்பட பல இடங்களுக்கும் கடந்த நான்கு நாட்களாக சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]