முகப்பு News Local News வவுனியாவில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம்

வவுனியாவில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம்

வவுனியா செட்டிக்குளம் – சண்முகபுரத்தில் இன்று (26.07) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபரொருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் சுப்பையா பொன்னையா (வயது-70) என்பவர் தனது வீட்டு காணிக்குள் சத்தம் ஏதோ கேட்பதை உணர்ந்து வீட்டிற்கு வெளியே சென்ற சமயத்தில் காட்டு யானையின் தாக்குலுக்கு உள்ளாகியுள்ளார். அவரின் சத்தம் கேட்ட அயலவர்கள் அவரை மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் , ஓமந்தை , நெடுங்கேணி, ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளின் காட்டு யானைகள் மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன் குடியிருப்புக்களையும் சேதமாக்குகின்றது.

செட்டிக்குளத்தில் கடந்த மூன்று மாதத்தினுள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பித்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com