வவுனியாவில் எட்டு மாதக்குழந்தைக்கு நடந்த விபரீதம்

வீட்டில் இருந்த எட்டு மாதக் குழந்தையொன்றை திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பலொன்று பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குட்செட் வீதி, முதலாம் குருக்குத் தெருவிலுள்ள வீட்டொன்றுக்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட குழு இன்று(31) அதிகாலை இந்தக் குழந்தையைக் கடத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து அறியவந்துள்ளது.

குழந்தையின் தந்தை லண்டனில் தொழில் புரிவதாகவும், தனக்கும் கணவனுக்கும் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடு காணப்பட்டு வருவதாகவும், இதனால், கணவனே ஒரு குழுவை நியமித்து பிள்ளையைக் கடத்தியிருக்கலாம் என பிள்ளையின் தாய் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]