‘வவுனியா’வில் இரண்டு ஆசிரியைகளுக்கு எதிராகவே மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

வவுனியா ஹொரவப்பொத்தான வீதி வெளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியைகளுக்கு எதிராகவே மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் விடயம் பற்றி தெரியவருவதாவது,

கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது குறித்த பாடசாலையில் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவனான ஜதுவாணன் என்பவரது சகோதரன் நகரசபை வேட்பாளராக வெளிக்குளம் வட்டாரத்தில் போட்டியிட்டுள்ளார் எனினும் குறித்த வேட்பாளர் தோல்வியுற்றிருந்தார்.

இதனை மனதில் வைத்த ஆசிரியைகளான அஷ்ஷீனா உம்மா மஹ்பூப் (ஜீனா) மற்றும் திருமதி ஸ்ரீரஞ்சன் ஆசிரியை அவர்களும் தேர்தல் முடிந்து பாடசாலை ஆரம்பித்த தினம் அன்று குறித்த மாணவனை அழைத்து “உனது அண்ணாவிற்கு எத்தனை வாக்குகள் கிடைத்தது”? என்று வினாவியுள்ளார் அதற்கு அம்மாணவன் தெரியாது என்று பதில் அளித்துள்ளார் பின்பு அதே மாணவனிடம் இரண்டு நாட்களின் பின்னர் அதே கேள்வியை எழுப்பிய போது 30வாக்குகள் என்று பதில் கூற ஆசிரியை ஜீனா என்பவர் இல்லை உன்ட கொண்ணாவிற்கு 11 வாக்குகள் என்று கூறவும் இதனை அவதானித்த ஆசிரியை ஏன் என்னிடம் பொய் கூறினாய் என்று அடித்துள்ளார்.

மேலும் குறித்த மாணவனின் சகோதரி அதே பாடசாலையில் தரம் 11ல் கல்வி பயின்று வருகிறார் குறித்த மாணவியிடம் சென்ற ஆசிரியை , உன் தம்பி பொய் கூறியதால் நல்ல அடிவாங்கினான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அம்மாணவி தமது குடும்பத்தாரிடம் முறையிட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தார் குறிப்பிட்ட இரண்டு ஆசிரியைகளுக்கும் எதிராக வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், பாடசாலை அதிபரிடமும், வலயகல்வி பணிப்பாளரிடமும் மாணவன் மீது ஆசிரியைகள் தாக்குதல் நடாத்தியதாகவும் இதனால் மாணவன் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் எனவும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாடசாலை அதிபரிடம் வினவியபோது குறித்த மாணவன் நன்றாக கல்வி பயில கூடியவன் என்பதுடன் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்று சித்தியெய்தியவன் என்றும் குறிப்பிட்டதுடன் சம்பவம் இடம்பெற்ற அன்று ஆசிரியை தாக்கியுள்ளதை ஏற்றுக்கொண்ட போதிலும் கடுமையாக தாக்கவில்லை என்றும் ஒருமுறை இலேசாகவே தாக்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 14ம் திகதி அன்று சம்பவம் இடம்பெற்ற போதிலும் இதுவரையிலும் யாராலும் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லை பாடசாலை நிர்வாகம், வலய கல்வி பணிமனை , வடமாகாண கல்வி அமைச்சு இதுவரையில் எதை செய்கிறார்கள். என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

பாடசாலை ஆசிரியைகளை பொறுத்தவரையில் மாணவனிடம் இவ்வாறான கேள்விகளை எழுப்பியுள்ளது என்பது தவறான ஓர் விடயமாக பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் இதேவேளை சமூக வலைத்தளங்களிலும் முகநூல்களிலும் குறித்த ஆசிரியைகளுக்கு எதிரான பரப்புரைகள் பரப்பிவருகின்றனர்.

மேலும் குறித்த ஆசிரியை ஒருவருக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பின்னணி இருப்பதாகவும் அதனால் ஏனைய ஆசிரியர்களும் அதிபரும் குறித்த ஆசிரியைக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை என்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் தரப்பினர் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.