வவுனியாவில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் மரக்காலை முற்றாக எரிந்து நாசம்

வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மரக்காலையில் இன்று(சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, மரக்காலை எரிந்து நாசமாகியுள்ளது.

வழமைபோன்று வியாபார நடவடிக்கையில் உரிமையாளர் ஈடுபட்டிருந்தபோதே கடையினுள் திடீரென தீப்பற்றியதை அவதானித்துள்ளார்.

உடனடியாக தீயை அணைப்பதற்கு தன்னாலான முயற்சியை எடுத்திருந்ததோடு அயலவர்களையும் அழைத்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் அதிகளவான வெப்பநிலை காணப்படுகின்ற நிலையில் தீ விரைவாக ஏனைய இடங்களுக்கும் பரவியுள்ளது.

இதனையடுத்து நகரசபையின் தீயணைப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டதுடன், சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டது.

எனினும், மரக்காலையினுள் இருந்த மரங்களும், சில இயந்திரங்களும் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ ஏற்படக்காரணம் இதுவரையில் கண்டறிப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் வவுனியாவில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]