வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு நுளம்பு பெருக்கம்

வவுனியாவில் கடந்த இரண்டு வாரமாக நகரை அண்மித்த பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் அப்பகுதிகளில் டெங்கு நுளம்பு பரிசோதனைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதால் அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதேச மக்கள் போதிய ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த இரு வார காலப்பகுதியில் குறித்த பகுதியில் 10ற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]