முகப்பு News Local News வவுனியாவில் அண்ணனை தேடிய தங்கை பரிதாப மரணம்

வவுனியாவில் அண்ணனை தேடிய தங்கை பரிதாப மரணம்

காணாமல் போன அண்ணனை தேடிய தங்கை உயிரிழந்தார்.வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் இராசநாயகம் டிலாந்தினி என்ற சிறப்பு தேவைக்குட்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் சகோதரனான இ. ஜெனிஸ்ராச் கடந்த 2007 ஆ ம் ஆண்டு நீர் கொழும்பு பகுதியில் வைத்து காணாமல் போனார்.

அதன்பிரகாரம் வவுனியாவில் இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் தனது தாயுடன் குறித்த பெண் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கலந்து கொண்டு தனது சகோதரனை தேடிா் போராடி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com