‘வழிபாட்டு தளங்கள் உரிமையை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது’

நாட்டில் உள்ள மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மழுங்கடிக்கப் பார்கிறது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், ஹொரொவபதான, முக்கரவௌ ஜூம்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த போது, மஹிந்த ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டில் விகாரைகளையும் பள்ளிவாசல்களையும் அமைக்க மக்களுக்கு இருந்த உரிமையை பறிக்க, நாடாளுன்றத்தில் சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் சகல மதத்தவர்களின் வழிபாட்டு தளங்களை அமைக்கும் உரிமையை அரசாங்கம் தன் கையில் எடுத்துள்ளது என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]