வழமைக்கு திரும்பியது பியகம பாலத்தின் போக்குவரத்து

பியகம மற்றும் கடுவலை ஆகிய நகரங்களை இணைக்கும் பிரதான பாலத்தின் போக்குவரத்து நடவடிக்கை வழமையான நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு இதனை கூறியுள்ளது.

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் குறித்த பாலத்தின் ஊடாக பயணிப்பது அபாயத்தை ஏற்படுத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், வீதிப் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் முப்படையினர் இணைந்து விரைவாக அந்தப் பாலத்தை திருத்தியமைத்துள்ளனர்.

இதனையடுத்து பாலத்தின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]