வழக்கு தொடர்ந்து சிறைப்படுத்தினால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அழுத்தகமகே தெரிவிப்பு

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சிறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்தகமகே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பாராளுமன்ற குழு அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான சட்ட நடவடிக்கை எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை

குறித்த சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்தகமகேயும் உள்ளடங்குவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்களுக்கெதிராக வழக்கு தொடர்ந்து சிறைப்படுத்த முயற்சிக்கின்றனர்.முடியுமானால் செய்து பாருங்கள்.விஜயகலாவுக்கு ஒரு சட்டம் எமக்கு ஒரு சட்டம். எங்களை சிறையில் அடைத்தால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]