வழக்குத் தொடுநரான பிரதான விசாரணை அதிகாரி 4 வருடங்களாக விசாரணைக்குச் சமூகமளிக்காததால் வழக்குத் தள்ளபடி, எதிரி விடுதலை!!

வழக்குத் தொடுநரான பிரதான விசாரணை அதிகாரியும், சாட்சியும் கடந்த 4 வருடங்களாக நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குச் சமூகமளிக்காததால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதோடு எதிரியான தனது கட்சிக்காரர் புதன்கிழமை 28.03.2018 ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக சட்டத்தரணி எம்.ஐ.எம்.எல். பழீல் தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற திருட்டுச் சம்பவமொன்றில் சந்தேக நபர்களாக மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவ்வேளையில் கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரியாகவும் பொலிஸ் பரிசோதகராகவும் கடமையாற்றிய சி. மஹலேக்கம் இக்குற்றச் செயல் சம்பந்தமான வழக்கைத் தொடர்ந்திருந்தபோது சந்தேக நபர்களில் இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் சில காலங்களுக்கு முன்னர் நீதிமன்றத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மூன்றாவது சந்தேக நபர் தான் இந்தக் குற்றத்தைப் புரியவில்லை என்றும் தான் நிரபராதி என்றும் நீதிமன்றத்தில் வாதாடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.
அதேவேளை, கடந்த 06.06.2014இல் இருந்து இந்த வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்துள்ளபோதும் 28.03.2018 வரை வழக்குத் தொடுநரும், இரண்டாவது சாட்சியும், பிரதான விசாரணை அதிகாரியுமான மஹலேக்கம் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளிக்க வருகை தந்திருக்கவில்லை.

இதனிடையே பிரதான விசாரணை அதிகாரியான அவருக்கு நீதிமன்றத்துக்கு சமூமளிக்கும்படி பல அழைப்பாணைகள் அனுப்பப்படடிருந்தும் கடந்த நான்கு வருடங்களில் ஒரு தடவையேனும் அவர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத சூழ்நிலையில், தொடர்ந்தும் வழக்கை நடாத்திச் செல்ல நீதிபதியிடம் பொலிஸாரால் அனுமதி கேட்கப்பட்டது.

இந்தவேளையில், கடந்த 4 வருடகாலமாக எதிரி நீதிமன்றுக்குச் சமூகமளித்திருந்தும், பிரதான சாட்சியான பொலிஸ் பொறுப்பதிகாரி மன்றுக்குச் சமூகமளிக்காத நிலையில் இவ்வழக்கை தொடர்ந்தும் நடாத்திச் செல்ல அனுமதிக்காது, வழக்கை முடிவுறுத்தி எதிரியை விடுதலை செய்யுமாறு எதிரி தரப்பு சட்டத்தரணி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு விவாதங்களையும் ஆராய்ந்த, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி யுனனவைழையெட ஆயபளைவசயவந யனெ யுனனவைழையெட னுளைவசiஉவ துரனபந ஆராயஅஅயவா ஐளஅயடை ஆராயஅஅயவா சுணைஎi குறித்த வழக்கை முடிவுறுத்தி, சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் எதிரியை விடுதலை செய்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]