வளிமண்டளவியல் திணைக்களம் பொது மக்களுக்கு வேண்டுகோள்!

இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என்பதால் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள்,  வெப்பமான வானிலையால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை பருகுமாறு அந்த திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

மேலும், பொதுவெளிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் இயன்றளவு நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]