வளிமண்டலத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

வளிமண்டலத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

இலங்கைச் சூழவுள்ள கீழ் மண்டலத்தின் தளம்பல் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கைக்கு அண்டைய கடற்பரப்பில் மூன்று விதமான தாழமுக்க நிலை உருவாகியுள்ளதால் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்க்கான வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வேளையில் 70km முதல் 80km வரையிலான காற்று வீசக்கூடும்.

ஓரிரு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடி இடிக்கும் வேளைகளில் மரத்தின் கீழோ, வெட்ட வெளியிலோ நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]