வளர்ப்பு சிங்கம் தனது மிருகத்தனத்தை வெளிக்காட்டிய போது – இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்

தென் ஆப்பிரிக்காவின் தபாஜிம்பி என்ற பகுதியில் தனியார் உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இங்கு சிங்கம் உலாவும் இடத்துக்குள் கவனக்குறைவாக நுழைந்த நபர் ஒருவர், மிக அருகில் சிங்கம் நிற்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்து பிரதான கதவு அருகே அவர் ஓடுவதற்குள், பாய்ந்து வந்த சிங்கம், அவரது கழுத்தை பிடித்து இழுத்துச் சென்று கொடூரமாக குதறியது. இதை கண்ட மற்றொரு பெண் அவரை காப்பாற்றும்படி கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள், துப்பாக்கியால் சுட்டு முழக்கம் எழுப்பி, சிங்கத்தை ஓட வைத்தனர். பின்னர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]