யாழ்.வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து சுமார் 30 மில்லியன் பெறுமதியான 98 கிலோ போதைப்பொருட்கள்

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை , யாழ்.வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து சுமார் 30 மில்லியன் பெறுமதியான 98 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை

வடமாகாண கடற்படையின் புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வைத்து இன்று (06) மாலை 4.00 மணியளவில் சட்டவிரோத விரோதமான முறையில் கடத்த முற்பட்ட வேளையிலேயே போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 80 கிலோ கேரளா கஞ்சா 40 பொதிகளாகவும், கசிஸ் 4 கிலோ 38 பொதிகளாகவும் மற்றும் அபின் 4 கிலோ 7 பொதிகளாகவும் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சட்டவிரோத போதைப்பொருளின் சந்தை விலை 30 மில்லியன் ரூபா பெறுமதியுடையதென்றும், மேலதிக விசாரணைகளை விசேட அதிரப்படையினர் முன்னெடுக்கவுள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலினை தடுப்பதற்கு வடமாகாண கடற்படையினர் விழிப்புடன் செயற்படுவதாகவும் வடமாகாண கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.