வலுவிழந்துவரும் ஒன்றிணைந்த எதிரணி

வலுவிழந்துவரும் ஒன்றிணைந்த எதிரணி

ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன், அடுத்துவரும் தேர்தல்களின் போது அந்தக்கூட்டணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை சரிவு நிலையில் செல்லக்கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 53ஆக குறைவடைந்துள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்திய சிறு கட்சிகள் இரண்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அண்மையில் இணைந்துகொண்டனர்.

அதனையடுத்து, ஒன்றிணைந்த எதிரணி இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 45 உறுப்பினர்கள் மற்றும் சிறு கட்சிகளின் உறுப்பினர்கள் 10 உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் இணைந்ததாக ஒன்றிணைந்த எதிரணி செயற்பட்டு வந்தது.

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 05, மகஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் இருவர்  மற்றும் கம்யூனிஸ்ட், பிவித்துறு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவற்றின் உறுப்பினர்கள் இவற்றில் இணைந்திருந்தனர்.

இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் குறிப்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மகாணசபை தேர்தல்களின் போது, கட்சித் தாவல்கள் இடம்பெறலாம் என்பதால், ஒன்றிணைந்த எதிரணியில் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]