வலிப்பு நோயாளியான இளம்பெண் தீயில் கருகி மரணம்

வலிப்பு நோயாளியான இளம்பெண் தீயில் கருகி மரணம்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி, 78ஆம் கட்டை எனுமிடத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீயில் கருகி மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு குழந்தைகளின் தாயான கிருஷ்ணப்பிள்ளை இராஜினி (வயது 30) என்பவரே சனிக்கிழமை இரவு 17.02.2018 தீயில் கருகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணித்துள்ளார்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது. சம்பவ தினம் தனது வீட்டில் இப்பெண் பகல் போசனம் சமைத்துக் கொண்டிருந்துள்ளார்.

அதன் பின்னர் மாலையாகியும் வீட்டில் எதுவித நடமாட்டங்களும் இல்லாததால் அயலிலுள்ளவர்கள் மாலை 5 மணியளவில் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இளம்பெண் தீயில் கருகிய நிலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்துள்ளார்.

உடனடியாக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பெண் மரணித்து விட்டதாக பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெண்ணுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதால் வலிப்பு நோயைக் காரணம் காட்டி கணவன் பிரிந்து சென்று விட்டதாகவும் பெற்றோரின் தயவில் பெண்; வாழ்ந்து வருவதாகவும் அப்பெண்ணின் இரு பிள்ளைகளும் உறவினர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற் கூறு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம்பற்றி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]