வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

இதற்கெல்லாம் காரணம் பிள்ளையானும் கருணா அம்மானும் தான். அரசாங்கத்துடன் இருந்து அமைச்சுப்பதவி எடுத்தவர்கள் எங்களுடைய காணாமல் போன பிள்ளைகளை பெற்றுத்தந்தார்களா?. அதனை முதலில் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று மகனை இழந்த தாய் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தினமான ஞாயிற்றுக்கிழமை (10) மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இப்பேரணியில் கலந்து கொண்ட தன்னுடைய மகனைத் தொலைத்த தாயார் கருத்துத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடிப் பாலம் அருகில் இருந்து ஆரம்பமான பேரணி புதிய கல்முனை வீதி வழியாக அரசடிச் சந்தி, மட்டக்களப்பு திருமதி வீதி சுற்றுவட்டம் ஊடாக நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக மாகாத்மா காந்திப் பூங்காவையடைந்து அதனையடுத்து அவ்விடத்தில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை வாசித்தனர்.

அதனையடுத்து ஜனாதிபதி மற்றும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கான மகஜர்கள் கைளிக்கப்பட்டன. மகஜர்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு மாவட்ட இணைப்பாளர் எம்.எம்.அசீஸ் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.

இதில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை. திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பெருந்தோகையானோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அரசாங்கத்தினால் எமக்கான தீர்வுகள் கிடைக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால் இதுவரையில் எந்தவிதமான முன்னேற்ற கரமான தீர்வும் கிடைக்கவில்லை . எனவே எமது போராட்டமானது சர்வதேச மயப்பட்டதாகப்பரிணமிப்பதோடு எமக்கு நம்பிக்கை தரும் வகையில் சர்வதேச விசாரணையும் தலையீடும் தேவை என்று கோரிக்கை விடுத்தனர். ஜனாதிபதியும், சர்வதேசமும், மனித நேய ஆர்வலர்களும் இக்கோரிக்கையை ஏற்று எமக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

இன்று நடைபெறகின்ற இந்த போராட்டத்திற்கு பிள்ளையானும் கருணாவும் வந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் காரணம் பிள்ளையானும் கருணா அம்மானும் தான். அப்பாவிப்பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்த கருணா அம்மான் இப்போது எங்கே போய்விட்டார்.

அரசாங்கத்துடன் இருந்து அமைச்சுப்பதவி எடுத்தவர்கள் எங்களுடைய காணாமல் போன பிள்ளைகளை பெற்றுத்தந்தார்களா?. அதனை முதலில் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன். அப்படியான உண்மையான புலிகளை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்த அப்பாவியான மக்களை சுட்டுப் பொசுக்கியது. கடத்திச்சென்றது. 90ஆம் ஆண்டு 6ஆம் 7 மாதமங்களில் எவ்வளவு அப்பாவி மக்களை கொண்டு போனார்கள்.

எனது பிள்ளையை ஆமி கெண்டு சென்றது. மரணச்சான்று வைப்பதற்கு நான் தயாரில்லை. என்னுடைய பிள்ளைகளை இதுவரையில் காணவில்லை.
என்னுடைய மகன்’ காணாமல் போனார் என்று, அற்ப சொற்பப்பத்திற்காக எதற்காக மரணச்சான்றிதழ், காணாமல் போனோருக்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

என்னுடைய மகள் இருந்திருந்தால் ஒரு மருத்துவராக இருந்திருப்பார். சரத் பொன்சேகா இராணுவத்தளபதியாக இருந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் இப்போது அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சராக இருக்கின்றார். எம்முடைய மக்களின் கோரிக்கையெல்லாம் நீதியேயாகும் என்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]