வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு அரசை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது

காணாமலாக்கப்பட்டவர்கள்

முன்னிலை சோசலிசக்கட்சியினர் ஏற்பாடுசெய்ய இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் வேளை இடம்பெற்றது.

கடந்த இரண்டாயிரத்து பதினொராம் வருடம் முன்னிலைசோசலிசக்கட்சியின் யாழ் மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்ட முன்னிலை சோசலிசக்கட்சியின் சமூக செயற்பாட்டாளர்களான லலித் மற்றம் குகன் உள்ளிட்ட சகல காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வழங்கவேண்ஈடும் என்பது இவ் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

அத்துடன் காணாமலாக்கப்பட்ட சகல மக்களின் தகவல்களையும் அரசாங்கம் வெளிப்படுத்துவதுடன் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

சமவுரிமை இயக்கத்தினர் மற்றும் தென்பகுதி சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இந்த ஆரப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]