வலப்பனையில் பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் படுகாயம்

வலப்பனை

நில்தண்டாஹின்ன தெறிபாஹா பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 37 பேர் படுங்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வலப்பனை நில்தண்டாஹின்னவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தெறிபாஹா நோக்கி பயணித்த தனியார் பஸ், நில்தண்டாஹின்ன – தெறிபாஹா பிரதான வீதியில் அபன்எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்துள்ளது.

படுகாயமடைந்தவர்கள் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதுடன் அதில் 13 பேர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பில் தெறிபாஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]