வலது பக்கம் உள்ள கண் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது ஒருசில நம்பிக்கையானது மக்கள் மத்தியில் உள்ளது

பொதுவாக வலது கண் துடித்தால் கெட்டது என்றும் இடது கண் துடித்தால் நல்லது என்று கூறுவர். ஆனால் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை குறைபாடுகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

கண்கள் துடிப்பது ஏன்?
குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறட்சி, மன அழுத்தம், அதிக காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, அதிக நேரம் புத்தகம் படிப்பது போன்ற செயல்பாடுகள் கண்களின் ஆரோக்கியத்தைக் குறைத்து கண் துடிப்புகளை ஏற்படுத்துகிறது.

மேலும் கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாக கண் துடிக்கும்.
ஆனால் நீண்ட நாள் கண் துடிப்பு அல்லது வெட்டி இழுப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அது மூளை தொடர்பான கோளாறாகவும் இருக்கலாம்.

கண் துடிப்பை தடுப்பது எப்படி?
கண் துடிப்பினை தடுக்க தினமும் நன்றாக உறங்குவதுடன், கண்களுக்கு போதிய ஓய்வினைக் கொடுக்க வேண்டும்.
கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால், கண் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து கண் துடிப்பது நிற்கும்.
கண் துடிப்புடன் கண் சிவந்து, எரிச்சல், நீர் வடிதல் என்று இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

கண்கள் துடிப்பதன் பலன்கள் என்ன?

வலது புருவம் – பணவரவு உண்டாகும்.
இடது புருவம் – குழந்தை பிறப்பு, கவலைகள் உண்டாகும்.
புருவத்தின் இடையில் – பிரியமானவருடன் இருத்தல்.
கண் நடுபாகம் – மனைவியை பிரிந்திருத்தல்.
வலது கண் துடித்தால் – நினைத்தது நடக்கும்.
இடது கண் துடித்தால் – மனைவியின் பிரிவு, கவலைகள் ஏற்படும்.
வலதுகண் இமை – மகிழ்ச்சியான செய்தி வரும்.
இடது கண் இமை – கவலைகள் உண்டாகும்.
வலது கண் கீழ் பாகம் – பழி சுமக்க நேரிடும்.
இடது கண் கீழ் பாகம் – செலவுகள் ஏற்படும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]