வறுமையை இல்லாமல் செய்யமுடியும் – மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்

வறுமையை இல்லாமல் செய்யமுடியும் – மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்

பாரியளவிலானதை விடவும் சமூக மட்டத்திலிருந்து செயற்படுத்தக்கூடியதான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் சுயதொழில், சிறிய நடுத்தர அளவிலான வருமானத்துறையினை மேம்படுத்த முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய உதவித்திட்டத்தின் நிதியில் நடைமுறைப்படுத்தப்படும் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தித்திட்டம் குறித்து திங்கட்கிழமை (12) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

அவுஸ்திரேலிய உதவித்திட்டத்தின் – உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தித்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் உள்வாங்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், தொழிலுக்காக போராடிக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் தொழில்த்துறைத் திறன்களுடன் காணப்படுகின்றனர்.

வரலாற்று ரீதியான, பாரம்பரியமான பிரதேசங்கள் பலவற்றை மட்டக்களப்பு மாவட்டம் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பலவகையான கலாச்சாரங்கள் காணப்படுகின்றன. விவசாயத்துறைசார்ந்த செயற்பாடுகள் அதிகமாக உள்ளன. சிறுசிறு தீவுகள் பல உள்ளன.

இவற்றினையெல்லாம் மையப்படுத்தியமான சூழலியல் சார் சுற்றுலாத்துறைக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். மட்டக்களப்பு நகரைச் சுற்றியதான வாவியைப் பயன்படுத்த முடியும். உலகின் பெரிய நகரங்களைவிடவும் அழகு மிகுந்தது மட்டக்களப்பு நகரம். இந்த வளத்தினைச் சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்த முடியும்.

சிறு சிறு வியாபாரத்துறைகளை மேற்கொள்கின்றவர்களையும் உள்வாங்கிப் பயன்படுத்தக்கூடியதான சுற்றுலாத்துறையினை ஏற்படுத்துவதன் மூலம் வருமான மட்டத்தினை உயர்த்த pவாழ்க்கைச் செலவுப் போராட்டத்தில் அவர்கள் எதிர் கொள்ளக் கூடிய திறனை வழங்க முடியும்.

அதே நேரத்தில் ஆங்கில மொழி தவிர்ந்த மொழிரீதியான சீன, ஜப்பான் இன்னும் வேறு மொழிகளைப் Nசுபவர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். அவர்களுக்கான மட்டக்களப்பு பாரம்பரியத்தை வழங்கக்கூடிய மொழியறிவு சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

மட்டக்களப்பின் உற்பத்தித்துறை சார்ந்து பெறுமதிசேர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மீன்பிடித்துறை சார்ந்தும் சுற்றுலாத்துறையை N;மம்படுத்த முடியும். அந்த வகையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஊடாக சுயதொழில் மேம்பாடு, வருமான அதிகரிப்பு ஏற்பட்டு மக்களதுவாழ்க்கைத்தரம் உயர்ச்சியடைய வேண்டும் என்றார்.

இன்றைய கலந்துரையாடலில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்டச் செயலாளர் ஏ,நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், சுற்றுலாத்துறை மூலமாக வறுமைக்குறைப்பு திட்டத்தின் தொழில் சந்தை ஆலோசகர் கலாநிதி மர்கஸ் பவுலர், தொழில் சந்தை ஆய்வு அதிகாரி கலாநிதி சுனில் சந்திரசிறி, திறன் திட்டமிடல் முகாமையாளர் சிறியானி ஏக்கநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மரினா உமேஸ், இணைப்பு அதிகாரி சி.லாவன்யா உள்ளிட்டேர்ரம் கலந்து கொண்டனர்.

சுற்றுலாத்துறை மூலமாக வறுமைக்குறைத்தல் என்ற நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டமானது மட்டக்களப்பு, அம்பாறை. பொலநறுவை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சுற்றுலாத்துறை மற்று விருந்தோம்பல் கைத்தொழில் துறையில் உள்ள பெண்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்களை அபிவிருத்தி செய்யும் திட்டமாகும். 2020ஆம் ஆண்டு வரையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மா.உதயகுமார் மா.உதயகுமார் மா.உதயகுமார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]