வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (09) மதியம் பயனாளிகளுக்கான வீட்டுத்திட்ட காசோலைகளை முதலமைச்சர் வழங்கி வைத்தார்.
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கெ குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து இந்த வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன்.
வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், முதலமைச்சர் செயலக அதிகாரிகளினால் குறித்த பயனாளிகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே சுமார் 9 லட்சம் பெறுமதியான வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிதியில் இருந்து நேற்றையதினம் முதற்கட்டமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகளை முதலமைச்சர் வழங்கி வைத்துள்ளதுடன், கட்டம் கட்டமாக ஏனைய மிகுதி நிதிகளையும் முதலமைச்சரினால் வழங்கி வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]