வறட்சியால் வவுனிக்குளத்தின் நீர் மட்டம் குறைவு

வறட்சியால்
வறட்சி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

இதனால் நன்னீர் மீன்பிடியை மேற்கொள்ளும் 87 இற்கு மேற்பட்ட மீனவக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த காலத்தில் இந்த குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விவசாயமும் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.