வறட்சியால் நாட்டில் 9 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

வறட்சியால் நாட்டில் 9 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.

வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குளங்களும், நீர்நிலையங்களும் வற்றிப்போயுள்ளன. இதனால் பலமைல்தூரம் நடத்துச்சென்றே நீரைப்பெறவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சிறுதானியச் செய்கை உட்பட விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பல தாவரங்கள் நீரின்றி கருகிமடியும்நிலை உருவாகியுள்ளதால், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புஏற்பட்டுள்ளது.குளங்களும், நீர்நிலைகளும் நீர்இன்றி காணப்படுவதால் மீன்கள் செத்துமடிகின்றன. வனவிலங்குகள் மக்கள் வாழும் பகுதியை நோக்கியும் படையெடுத்வருகின்றன.

வறட்சியால் நாட்டில்

அதேவேளை, உஷ்ணமான காலநிலையால் பகல்நேரங்களில் வெளியில் வருவதற்கே மக்கள் தயக்கம்காட்டிவருகின்றனர். சரும ரீதியிலான நோய்களும் ஏற்படுகின்றன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மதியம் வெளியிட்டட அறிக்கையின் பிரகாரம் வறட்சிகாரணமாக,
கிழக்கு மாகாணத்தில் ஒரு இலசட்த்து 5 ஆயிரத்து 847 பேரும், மேல் மாகாணத்தில் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 322 பேரும், தென்மாகாணத்தில் 2 ஆயிரத்து 147 பேரும், வடமத்திய மாகாணத்தில் 11 ஆயிரத்து 276 பேரும், வடக்கு மாகாணத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 523 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 3 ஆயிரத்து 171 பேரும், வடமேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 671 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]