வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் அமைப்பின் 11வது மாநாடு இன்று

இலங்கை வர்த்தகர்களுக்கு தமது வர்த்தக வசதிகளை விரிவுபடுத்துவதில் உள்ள தடைகளை இணைக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் அமைப்பினரின் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பு 01 ல் உள்ள சேர் ரசிக் பறீட் மாவத்தையில் அமைந்துள்ள மிலோதா நிதிக்கல்வி நிறுவனத்தில் இந்த அமைப்பினரின் 11வது சந்திப்பு இன்று இடம்பெறுகின்றது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆலோசனைக்கமைவாக நிதியமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாகவும் மற்றும் விரைவாகவும் நிறைவேற்றிக்கொள்ள இருந்த தடைகள் பலவற்றை இந்த அமைப்பினால் நீக்க முடிந்துது.

நிதி தொடர்பிலான தகவல்களை வழங்கும் CRIB நிறுவனத்தின்மூலம் சுயமாக அறிக்கைகளை இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ளுதல் இறக்குமதி செய்யப்படும் மீன்கள் தொடர்பிலான பரிசேதனைகள் குறித்த விடயங்கள் மீன்பிடித்துறைமுகங்களை அபிவிருத்தி செய்து மீன்பிடி வள்ளங்களை சீர்செய்தலுக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக வசதிகள் இந்த அமைப்பினூடாக உள்ளுர் வர்த்தகர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

நிதியமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பிற்கு அமைச்சர்களான நிசாத் பதியூதின் , ஹபீர் ஹசீம் , மலிக்சமரவிக்கிரம , லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன , இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதிஇந்திரஜித் குமாரசுவாமி, திறைசேரியின் செயலாளர்கலாநிதி ஆர்எச்எஸ் சமரதுங்க , பிரதமரின் ஆலோசகர் சரித்த ரத்வத்தே , தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.