வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை

கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக அரிசி வகைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
சந்தையில் அரிசியின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபையினால் கட்டுப்பாட்டு விலைகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.
நேற்றிருவு (09) தொடக்கம் அந்த கட்டுப்பாட்டு விலைகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்படி சம்பா 1 கிலோவின் சில்லறை விலை 80 ரூபா நாட்டரிசி கிலோவொன்று 72 ரூபா பச்சை அரிசி கிலோவொன்று 70 ரூபாவாக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகளுக்கு அரிசி வகைகளை விற்பனை செய்யாத வர்த்தகர்களை தேடி சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.