வரும் நாட்களில் இலங்கை அணி பங்கேற்கவுள்ள போடிகளின் பட்டியல் இதோ!

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கவுள்ள கிரிக்கெட் போடிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதோ போட்டிகள் தொடர்பான விபரங்கள்.

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

ஜனவரி 24ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 1ஆம் திகதி தொடங்கவுள்ளது.

இதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ஆம் திகதியும், இரண்டாவது போட்டி பிப்ரவரி 21ஆம் திகதியும் நடக்கவுள்ளது.

இதன்பின்னர் நடக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மார்ச் 3 ஆம் திகதி நடக்கிறது.

மார்ச் 6 இரண்டாவது போட்டியும், மார்ச் 10 மூன்றாவது போட்டியும், மார்ச் 13 நான்காவது போட்டியும், மார்ச் 16 ஐந்தாவது போட்டியும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து டி20 தொடர் நடக்கவுள்ளது. மார்ச் 19ஆம் திகதி முதல் போட்டியும், மார்ச் 22ஆம் திகதி இரண்டாவது போட்டியும், மார்ச் 24ஆம் திகதி மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]