விசேட வைத்திய நிபுணர்களுக்கு விதிக்கப்பட்ட 24 சதவீத வருமான வரியை குறைக்க தீர்மானிக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி , அவர்களுக்கு விதிக்கப்பட்ட 24 சதவீத வருமான வரி அவ்வாறே இருக்கும் என அந்த அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு வருவாய் சட்டத்திற்கு அமைய இதுவரை அறவிடப்படும் வரி சதவீதத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
சுகாதார அமைச்சர் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் , நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கடந்த வௌ்ளிக்கிழமை மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது வருமான வரி சதவீதத்தில் மாற்றம் செய்வது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது விசேட வைத்திய நிபுணர்களுக்கு சில நிவாரணங்களை வழங்க மாத்திரமே இதன்போது உடன்பட்டதாக நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், விசேட வைத்திய நிபுணர்களுக்கு விதிக்கப்பட்ட 24 சதவீத வருமான வரி , 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.
நிதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தவரியை 12 சதவீதமாக குறைக்குமாறு வலியுறுத்தி, விசேட வைத்திய நிபுணர்களும் மருத்துவ பணியாளர்களும் போராட்டம் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com