வருங்கால அணியை உருவாக்கும் தோனி!

வருங்கால அணியை உருவாக்கும் தோனி!

இந்திய அணியின் ஒருநாள் போட்டியின்  கெப்டன் தோனி, இளம் வீரர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு பின்னர்  அவரைப் போல்  ஒரு வீரரை அணியில் உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் ஒருநாள் போட்டி கெப்டன் கூடிய விரைவில் ஓய்வு பெறுவார் என்ற நிலையில், அவருக்கு பின் அணியின் அவரை போன்ற ஒரு வீரர் வேண்டும் என்ற எண்ணத்தில் இளம் வீரர் ஒருவரை தெர்ந்தெடுத்து அவருக்கு பயிற்சி அளித்து வருகின்றார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர், சிறந்த வெற்றி கெப்டன் மற்றும் சிறந்த விக்கெட் காப்பாளர் எனப்பல புகழ்களுக்கு சொந்தக்காரர் தோனி. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜர்கண்ட் அணி தோனியின் ஆலோசனையில் செயல்பட்டு வருகிறது.

இதில் ஜர்கண்ட் அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் என்பவர் மீது தோனி தனி கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோனியை போலவே இஷானும் விக்கெட் காப்பாளர்  என்பதால் தன்னை போலவே இந்திய அணிக்கு மற்றொரு வீரரை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.