வரி ஏய்ப்பு: மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம்

வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் 21 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து கால்பந்து வீரர் மெஸ்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் நிராகரித்து, தண்டனையை உறுதி செய்துள்ளது.

உலக புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி. இவர் அர்ஜென்டினா, பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலானக் காலகட்டத்தில், 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து ஸ்பெயின் அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாதங்கள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து பார்சிலோனா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து லியோனல் மெஸ்ஸி தரப்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த மேல் முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் மெஸ்ஸிக்கு இந்த விவகாரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஸ்பானிய சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனை விதிப்பு சோதனைக்கால விதிமுறைகளின் கீழ் வருவதால் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறை செல்ல வேண்டியதில்லை.

வன்முறையற்ற, 2 ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனைகளில் பெரும்பாலும் குற்றம்சாட்டப்பட்டோர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்காது என்று அந்நாட்டு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]