வரி ஏய்ப்பு : ஜூலை 31-ஆம் திகதி கோர்ட்டில் ஆஜராக ரொனால்டோவிற்கு உத்தரவு

வரி ஏய்ப்பு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூலை 31-ஆம் திகதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவரின் சிறந்த ஆட்டத்தால் இந்த சீசனில் லா லிகா கோப்பையும், ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையும் ரியல் மாட்ரிட் கைப்பற்றியது.

ரொனால்டோ கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து 2014 வரை அவரது படத்தின் உரிமம் சம்பாதித்த வருமானத்தில் வரிஏய்ப்பு நடத்தியதாக ஸ்பெயின் நாட்டின் வருமான வரித்துறை கடந்த 13-ஆம் திகதி வழக்குப்பதிவு செய்தது. அதில் சுமார் 14.7 மில்லியன் யூரோக்கள் வரை வரிஏய்ப்பு நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு

இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிப்பதற்காக அடுத்த மாதம் 31-ந்தேதி கோரட்டில் ஆஜராகும்படி ரொனால்டோவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]