வரிவிதிப்புக்காக சம்பளத்தை குறைத்த பாடலாசிரியர்

மத்திய அரசு விதித்த 28 சதவீத ஜிஎஸ்டி வரிக்கு மேலே தமிழக அரசு விதித்த 30 சதவீதம் கேளிக்கை வரி தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளத. தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி இன்று தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தமிழக திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலரும் தங்களுடைய பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாடலாசிரியர் மதன் கார்க்கி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது,

திரையரங்குகள் மூடியிருப்பதை பார்க்கும்போது மனது வலிக்கிறது. கேளிக்கை வரி திரும்ப பெறப்பட்டு மீண்டும் சரியான பாதையில் செல்லும் என நம்புகிறேன். வரி மறு சீரமைப்பு ஆகும் வரை பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு நான் வாங்கும் சம்பளத்தில் 15 சதவீதத்தை குறைத்துக் கொள்கிறேன். இது துறைக்கு உதவும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மதன் கார்க்கியின் இந்த அறிவிப்புக்கு, ட்விட்டர் தளத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்து அவரை பாராட்டி வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]