வரவு செல­வுத் திட்­டத்துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்க முடி­யாது – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு

கடந்த ஆண்­டு­க­ளில் வரவு செல­வுத் திட்­டத்துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­தைப் போன்று இந்த ஆண்டு வாக்­க­ளிக்க முடி­யாது. தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னையை அரசு தீர்க்­க­ வில்லை. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர், நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் தெரி­வித்துள்ளனர்.

இத­னை­ய­டுத்து எதிர்­வ­ரும் 16 ஆம் திக­திக்கு முன்­னர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சந்­திப்­பது என்­றும் அதன் பின்­னரே வரவு செல­வுத் திட்­டத்­துக்­கான வாக்­க­ளிப்­புத் தொடர்­பில் முடி­வெ­டுப்­பது என்றும் நேற்­றைய கூட்­டத்­தின் இறு­தி­யில் தீர்­மா­னிக்­கப்பட்டது.

கடந்த இரண்டு தட­வை­கள் போன்று இந்த முறை­யும் வரவு செல­வுத் திட்­டத்துக்கு ஆத­ர­வ­ளிக்க முடி­யாது. மக்­க­ளின் பிரச்­சி­னை­கள் எது­வுமே தீர்க்­கப்­ப­ட­வில்லை. வரவு செல­வுத் திட்­டத்துக்கு வாக்­க­ளிப்­பது குறித்து நாம் நீண்ட அவ­தா­னம் செலுத்த வேண்­டி­யுள்­ளது என்று உறுப்­பி­னர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சி.சிறி­த­ரன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன். கவீந்­தி­ரன் கோடீஸ்­வ­ரன் ஆகி­யோர் இவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைத்துள்ளதாக தெரிகிறது. வரவு செல­வுத் திட்டத் துக்கு ஆத­ர­வ­ளிப்­பது குறித்த தீர்­மா­னம் எடுப்­பது ஒரு விட­யம். தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்­பது இரண்­டா­வது விட­யம்.

இரண்­டை­யும் ஒன்­று­டன் ஒன்று இணைத்துப் பார்க்க முடி­யாது. இரண்­டை­யும் வெவ்வேறா­கவே அணுக வேண்­டும் என்று கூட்­ட­மைப்­பின் தலைமை அறி­வுறுத்­தி­யுள்­ளது.