திருமணத்தைப் பற்றி வரலட்சுமி

வரலட்சுமி

வரலட்சுமி சமீபத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினார். இதன் காரணமாக வரலட்சுமி அரசியலில் இறங்கிவிட்டதாகவும் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின.

ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். சிபி சத்யராஜ் ஹீரோவாக நடித்த ‘சத்யா’ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலட்சுமி, நான் நடத்தும் சேவ் சக்தி அமைப்பு தொடர்பாக துணை முதல்வரைச் சந்தித்து பேசினேன். நான் அதிமுக கட்சியிலோ, பிற கட்சியிலோ அல்லது என் அப்பாவின் கட்சியிலோ இணையவில்லை.

எனக் கூறியுள்ளார். தனக்கு சினிமாவிலும், பிற பணிகளிலும் இன்னும் நிறைய பொறுப்புகள் இருப்பதால், திருமணத்தைப் பற்றி இப்போதைக்கு கொஞ்சம்கூட யோசிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார் வரலட்சுமி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]