வரதட்சணை கேட்டு பெண்ணை பட்டினி போட்டு கொலை செய்த கொடூரம்!

வரதட்சணை கேட்டு பெண் ஒருவரை பட்டினி போட்டு அவரது கணவர் மற்றும் மாமியார் கொலை செய்த சம்பவம் கேரளாவில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே கருங்கப்பள்ளியை சேர்ந்தவர் துஷரா. இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போதே பெண் வீட்டார் பணம், நகை என வரதட்சணை கொடுத்துள்ளனர். 2 லட்சம் பின்னர் தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு பெண்ணின் கணவர் மற்றும் அவரது மாமியார் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடந்த 5 வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். சாப்பிட எதுவும் கொடுக்காமல், தண்ணீர் மட்டுமே கொடுத்து வந்துள்ளனர். இதனால் அவரது எடை 20 கிலோவாக குறைந்தது. உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சந்தேகத்தின் பேரின் பொலிஸார்  நடத்திய விசாரணையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெண்ணின் கணவர் மற்றும் அவரது தாயை பொலிஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் பொலிஸாரிடம், ‘எனது மகளை அவர்கள் பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. வரதட்சணை கேட்டு என்னுடைய மகளை கொடுமைப்படுத்தினார்கள். மகளின் வாழ்க்கையை எண்ணி புகார் கொடுக்காமல் விட்டுவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]