வரட்சியுடன் கூடிய காலநிலை மற்றும் மண்சரிவினால் 9 இலட்சம் ​பேர் பாதிப்பு

தற்பொழுது நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலை மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் 15 மாவட்டங்களில் 2இலட்சத்து 45ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர்முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.வரட்சியுடன் கூடிய காலநிலை

மொத்தமாக இந்த குடும்பங்களை சேர்ந்த 9இலட்சத்து 5ஆயிரத்து 668 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி இரத்தினபுரி அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக 50 குடும்பங்களை சேர்ந்த 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரட்சியின் காரணமாக ஆகக்கூடுதலானோர் கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்;துவம் குறிப்பிட்டுள்ளது. இங்கு 48ஆயிரத்து 124 குடும்பங்களை சேர்ந்த 2இலட்சத்து 7ஆயிரத்து 991பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரட்சியினால் மிகிந்தலை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நேற்று மிகிந்தலை விகாரையில் வழங்கப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]