வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த காதல் ஜோடி கைது

வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த காதல் ஜோடி கைது

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த காதல் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியிலுள்ள ஒரு ஆற்றின் அருகே சவான்னா கிரேவின்ட் (22) என்ற பெண்ணின் சடலம் வயிறு கிழிக்கப்பட்ட நிலையில், கண்டெடுப்பட்டுள்ளது.

இது குறித்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் , இறந்த பெண்ணின் பக்கத்து வீட்டை சேர்ந்த புரூக் கிரவுஸ் என்ற பெண்ணும் அவரது காதலர் வில்லியம் கோயன் ஆகியோரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சவான்னா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கொலை செய்யப்பட்டதோடு, வயிற்றில் இருந்த குழந்தையின் நிலை என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.

எனினும் இவர்கள் இருவரும் கர்ப்பிணியாக இருந்த சவான்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளதாகவும், தங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக இத்தகைய கொடூர செயலை புரிந்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் முன்னதாக வில்லியம் வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிஸார் அங்கிருந்து ஒரு கயிற்றை கைப்பற்றி நிலையில், அதை டி.என்.ஏ. சோதனை மேற்கொண்ட போது, அதை வைத்து சவான்னாவின் கழுத்தை வில்லியம் நெரித்து கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]