வயிற்று வலியில் அவதிப்படுபவர்களுக்கு நொடியில் சரியாக்கும் இயற்கை மருத்துவம் இதோ!..

இன்றைய தலை முறையிடம் காணப்படும் தவறான உணவு பழக்கம், உணவை தவிர்த்தல், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் வயிற்று வலியால் பாதிக்கப்படுகின்றனர்.

தொடர்ச்சியாக ஏற்படும் வயிற்று வலியை சாதாரண உடல்நலக் குறைவாக நினைத்துவிடக் கூடாது.

ஏன் என்றால் வயிற்று வலி வேறு சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். மேலும் கடுமையான வயிற்று வலி பிரச்சனையை உடனடியாக போக்க உதவும் சில வழிகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

நடைபயிற்சி செய்தல்
இயற்கையான முறையில் வயிற்று வலியை குறைக்கவும் மற்றும் உடனடி நிவாரணமும் பெற நடைபயிற்சி செய்யலாம். மேலும் சாப்பிட்ட பின்பும் சற்றே நடந்தால் வயிற்று வலி வராமல் தடுக்கலாம்.

பெருங்காயம்
பெருங்காயத்தைப் பொரித்துப் பொடியாக்கி, அரை ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நின்றுவிடும்.

அருகம்புல்
அருகம்புல்லைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்தால் வயிற்று எரிச்சல் குணமாகும்.

மாதுளம் பழச்சாறு
வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கு மாதுளம் பழச்சாறு கொடுத்தால் வயிற்று வலி உடனே குணமாகும்.

தண்ணிர்
தினமும் நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் வயற்றை சரியாக பராமரிக்க முடியும். இது வயிற்று வலியைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவும்.

புதினா
புதினா புதினாவை தேநீரிலும், துவையலாகவும் சாப்பிடுவதால் வயிற்றுவலியும், வயிறு உப்புசமாக இருப்பதும் பெருமளவு குறையும்.

அகத்திக் கீரை
அகத்திக் கீரையைத் தண்ணீரில் வேகவைத்து, அந்தத் தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் கடுமையான வயிற்று வலி உடனே குணமாகும்.

சாதம் வடித்த நீர்
சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள் துாளும், சிறிது பனங்கற்கண்டும் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.

அத்திப் பழம்
அத்திப் பழத்தை வெய்யிலில் காயவைத்துப் பொடியாக்கி தேனில் ஊறவைத்து, தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]