வயலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

திருகோணமலையில் தமது வயலுக்கு நீர்ப்பாய்ச்ச சென்றவர் சடலமாக மீட்கப்பட்டதாக மூதூர் பொலிஸர் தெரிவித்தனர்.

கிளிவெட்டி பாரதிபுரத்தைச்சேர்ந்த 30 வயது இளைஞன், மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு பகுதியில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் வலிப்பு நோயாளி எனவும் வலிப்பு நோய் தாக்கத்தினாலே மரணம் சம்பவித்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]