வயதில் சின்னவரான காதலரை ரகசிய திருமணம் செய்த நடிகை

கன்னட நடிகை ரம்யா பர்னா தன்னை விட வயதில் சின்னவரான ஃபஹத் அலி கான் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் ரம்யா பர்னா(30). ஹனி ஹனி கன்னட படம் மூலம் நடிகையானார். மத்திய சென்னை படம் மூலம் கோலிவுட் வந்தார். தற்போது அவர் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரம்யா தன்னை விட வயதில் சின்னவரான ஃபஹத் அலி கான் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்கள் பெங்களூரில் ரகசியமாக திருணம் செய்து கொண்டனர்.

ரம்யாவுக்கும், ஃபஹத்துக்கும் திருமணம் நடந்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும் கடந்த 14ம் தேதி தான் உண்மை வெளியே வந்துள்ளது. இருவரும் ரகசிய திருமணம் செய்தது அவர்களின் குடும்பத்தாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரம்யாவும், ஃபஹத்தும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்தே அவர்கள் ரகசிய திருமண முடிவை எடுத்தனராம்.

மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கானின் உறவினர் ஃபஹத் அலி கான். திருமணம் நடந்தது பற்றி தொலைக்காட்சி சேனல்களை பார்த்தே தெரிந்து கொண்டதாக ஜமீர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]