வன்முறையை ஒரு போதும் ஏற்கப் போவதில்லை என்பதை சிவில் சமூகம் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்க வேண்டும் – கலாநிதி ஜெஹான் பெரேரா

கலாநிதி ஜெஹான் பெரேரா

நாட்டிலுள்ள எந்த சமூகத்தின் மீது வன்முறையை ஏற்படுத்தினாலும் அதனை ஒரு போதும் ஏற்கப் போவதில்லை என்பதை சிவில் சமூகம் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

சிவில் சமூகம் பலம் பெற வேண்டும் என்பதற்காக தேசிய சமாதானப் பேரவை பல்வேறு அனுசரணைகளை வழங்கி சிவில் சமூகத்தைக் கட்டியெழுப்பி வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சமகால நாட்டு நடப்புக்களில் சிவில் சமூகம் மற்றும் சர்வமதப் பேரவை உறுப்பினர்களின் பங்கும் பணியும் தொடர்பாக வியாழக்கிழமை 19.04.2018 கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் நாட்டின் 21 மாவட்டங்களில் சர்வமத பேரவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, சிவில் அமைப்புக்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை பன்முகத்தன்மை கொண்ட நாடு . இலங்கையில் இனங்களுக்கிடையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம், பாகுபாடு, ஓரங்காட்டல் இருக்க முடியாது.

முதலாந்தரப் பிரஜைகள் என்று ஒரு சாரார் வாழ்ந்து கொள்ள இரண்டாந்தரப் பிரஜைகளாக ஒரு சிலர் இருக்க முடியாது. எல்லோரும் சமமானவர்வள் அவர்கள் ஒரே விதத்தில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதிலேதான் புரிந்துணர்வின்றி நாட்டிலே பதற்ற நிலைமை காணப்படுகின்றது. இது ஒரு அறிவிலித் தனமான போக்கு.

இலங்கை என்பது ஒரு தாய் மக்கள் நிறைந்த குடும்பம் போன்றது. சமயப் போதனைகளும் அவற்றைத்தான் வலியுறுத்துகின்றன. ஆனால் சமயப் போதனைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்வோர்தான் அதன்படி நடக்காமல் சமயத்தைப் பிழையாகப் புரிந்து கொண்டு முரண்பாடுகளையும் வன்முறைகளையும் வளர்க்கின்றனர்.

நாட்டு மக்கள் அனைவரும் சமமாக நிருவகிக்கப்படவும் கண்ணியமாக நடத்தப்படவும் வேண்டும். உலகிலும் இவ்வாறுதான் இருக்க வேலண்டும். ஆனால் யதார்த்தம் அவ்வாறில்லை.

பல்லினத் தன்மையில் சம அந்தஸ்து வழங்கப்படாவிட்டால் எமது நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அம்பாறை கண்டி சம்பவங்கள் இதனைத்தன் நமக்குணர்த்தி நிற்கின்றன. கண்டி சிவில் சமூகம் வலிமை அதிகாரம் இல்லாத சந்தர்ப்பத்திலும் குறியீட்டு ரீதியிலான வல்லமையை வைத்துக் கொண்டு கலவர நேரத்தில் அவர்கள் செயற்பட்டார்கள்.

இங்கு நடந்தது தவறு என்று அவர்கள் ஊடக மாநாட்டில் வெளிப்படையாக எடுத்துச் சொன்னார்கள். மக்கள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்று கண்டியில் கோரி நின்றார்கள்.

பெரும்பான்மை இன மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டு விடும்படியாக எதனையும் செய்யக் கூடாது என்ற அச்சம் அரசுக்கு.

கண்டியிலுள்ள சிவில் சமூகத்தைப்போல நாட்டிலுள்;ள ஏனைய சிவில் சமூகங்களும் இதனைச் செய்ய வேண்டும். வன்முறைக்கு தயாரில்லை சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதை அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்சிசித் திட்டங்களுக்கூடாக சிவில் சமூகம் எங்கும் செயற்பட வேண்டும். தனியாகச் சிந்திக்காமல் சிவில் சமூகமாகச் சேர்ந்து சிந்திக்க வேண்டும். ஆண் பெண், சமூகம் என்று சிந்தினை பரஸ்பர உரையாடலுக்குச் செல்ல வேண்டும்.

இலங்கையில் பரஸ்பர உறவுமில்லை கலந்துரையாடலுமில்லை. அதுதான் நாம் எதிர்கொள்ளும் பாரிய சவால். சிவில் சமூகம் தயாராக இருந்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசைத் தூண்டலாம்.” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]